இந்தியா

இந்த குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா..? உ.பியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Summary:

2 Children Allegedly Tied Up And Relentlessly Thrashed For Stealing Fruits Kept In Prasad

நிகழ்ச்சி ஒன்றில் பிரசாதம் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பழங்களை திருடிய குற்றத்திற்காக இரண்டு சிறுவர்களின் கை, கால்களை கட்டிப்போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள நசீட்டி என்னும் கிராமத்தில் மதச்சடங்கு ஒன்று நடந்துள்ளது. மதச்சடங்கு முடிந்து அங்கிருந்தவர்களுக்கு பிரசாதம் கொடுப்பதற்காக பழங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த பழங்களில் சிலவற்றை அங்கிருந்த இரண்டு சிறுவர்கள் திருடியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த சிறுவர்களை பிடித்து கை, கால்களை கட்டிபோட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானநிலையில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிடுவருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.


Advertisement