இந்தியா

வேலை தேடி போன இளம் பெண்..! பூட்டிய அறைக்குள் 4 நாட்கள் கற்பழிக்கப்பட்ட சோகம்..!

Summary:

19-year-old girl from Bangladesh abused held captive in Bengaluru

வேலை தேடி சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வந்த வங்கதேசத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் நான்கு நாட்களாக பூட்டிய அறைக்குள் வைத்து கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசம் நரெய்ல் என்னும் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வேலை தேடி நுழைந்துள்ளார். இவர், இந்திய எல்லையில் ஒரு பெண்ணை சந்திக்க, அவர் பெங்களூருவில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி பெங்களூரு அழைத்து வந்துள்ளார்.

பெங்களூரு வந்த இடத்தில், அந்த பெண் அந்த இளம் பெண்ணை வாலிபர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த வாலிபர் அந்த இளம் பெண்ணை வேலை தருவதாக கூட்டி சென்று அறைக்குள் வைத்து பூட்டி, நான்கு நாட்கள் கற்பழித்துவந்துள்ளார். இதனிடையே அந்த இளம் பெண் அங்கிருந்து எப்படியோ தப்பித்துவந்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த மர்ம நபரையும், அந்த பெண்ணையும் தேடி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.


Advertisement