இந்தியா

கள்ளச் சாராயம் குடித்து 19 பேர் உயிரிழப்பு.! 9 பேருக்கு மரண தண்டனை.!

Summary:

பீஹாரில் மாநிலத்தில் 2016 ஆம் ஆண்டு பூரண மதுவிலக்கை முதல்வர் நிதிஷ் குமார் அமல்படு

பீஹாரில் மாநிலத்தில் 2016 ஆம் ஆண்டு பூரண மதுவிலக்கை முதல்வர் நிதிஷ் குமார் அமல்படுத்தினார். இந்த உத்தரவைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் கள்ளச் சாராயம் தயாரிப்பு மற்றும் விற்பனை அதிகரித்தது. இதனால் 2016 ஆகஸ்ட் மாதம் கோபால்கஞ்ச் மாவட்டம் கஜுர்பானி பகுதியில் விஷ சாராயம் குடித்த 19 பேர் பலியாயினர்.

இது தொடரபாக போலீசார்  4 பெண்கள் உள்பட  14 பேரை கைது  செய்தனர். இது தொடர்பான வழக்கு  கோபால்கஞ்ச் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடிபெற்று வந்தது. இந்த  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு  நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், இந்த குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் மரணமடைந்த நிலையில், 4 பெண்களுக்கு  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.


Advertisement