ஏண்டா மாஸ்க் போடல..? முகக் கவசம் அணியாத நபரைத் தட்டிக் கேட்ட தகராறு.! 18 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு..! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா

ஏண்டா மாஸ்க் போடல..? முகக் கவசம் அணியாத நபரைத் தட்டிக் கேட்ட தகராறு.! 18 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு..!

முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த இளைஞரை கண்டித்தது தொடர்பாக 18 வயது  உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், ரென்ட்டசின்தலா என்ற பகுதியை சேர்ந்தவர் கர்னாடி ஏலமண்டலா. இவர் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அன்னப்பு ரெட்டி எனும் இளைஞர் முகக்கவசம் அணியாமல் கர்னாடி ஏலமண்டலாவின் குடும்பத்தினர் அருகில் வந்துள்ளார்.

முகக்கவசம் அணியாமல் அருகில் வந்தது குறித்து ஏலமண்டலாவின் குடும்பத்தினர் அன்னப்பு ரெட்டியை கண்டித்துள்ளனர். இதனால், இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஏலமண்டலாவின் குடும்பத்தினர் காய்கறி சந்தையில் நின்றபோது அங்கும் முகக்கவசம் அணியாமல் அன்னப்பு சுற்றித்திரிந்துள்ளார்.

இதனை பார்த்த ஏலமண்டலாவின் குடும்பத்தினர் மீண்டும் அவரை கண்டிக்க, இந்த முறை விவகாரம் பெரிதாகியுள்ளது. தனது நான்கு நண்பர்களை அழைத்துவந்த அன்னப்பு ரெட்டி ஏலமண்டலாவின் குடும்பத்தினரை கட்டையால் தாக்கியுள்ளார்.

இதில் ஏலமண்டலாவின் மகள் பாத்திமாவின் தலையில் பலத்த காயம் ஏற்ப்பட, அவரது தலையில் இருந்து இரத்தம் கொட்டியுள்ளது. உடனே அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டநிலையில் பாத்திமா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அன்னப்பு மற்றும் அவரது நண்பர்களை கைது செய்துள்ள போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்ததை கண்டித்ததற்காக 18 வயது இளம் பெண் ஒருவர் பரிதாபாமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo