ஒன்றல்ல,இரண்டல்ல..ஒரே நேரத்தில் உயிரிழந்து கிடந்த 18 யானைகள்! நடந்தது என்ன? கண்கலங்க வைக்கும் சம்பவம்!!18-elephants-dead-in-assam

அசாமில் மின்னல் தாக்கியதில் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 18 யானைகள் உயிரிழந்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம்,நாகான் மாவட்டத்தில் பர்ஹாம்பூர் காவல் நிலையத்தின் கீழ் அமைந்துள்ள பமுனி வனப்பகுதியில் ஒரே நேரத்தில் 18 காட்டு யானைகள் இறந்து கிடந்துள்ளன. இந்நிலையில் அதனைக் கண்ட அப்பகுதி கிராமத்தினர் உடனடியாக காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த அவர்கள் உயிரிழந்த யானைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் யானைகள் இறந்ததற்கான காரணம் குறித்து சரியாக தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் கடுமையான மின்னல், இடியுடன் மழை பெய்து வருவதால், யானைகள் மின்னல் தாக்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் வனத்துறையினருக்கு யாரேனும் உணவில் விஷம் கலந்து இருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. உயிரிழந்த யானைகளுக்கு பிரேத பரிசோதனை செய்த பிறகுதான் இதுகுறித்த சரியான உண்மை தெரியவரும் என கூறப்படுகிறது. இவ்வாறு ஒரே நேரத்தில் 18 யானைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.