இந்தியா

கான்கிரீட் வாகனத்தில் பதுங்கி வெளி மாநிலத்திற்கு சென்ற 18 தொழிலாளர்கள்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Summary:

18 construction employees locked by police

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியதால், இந்தியா முழுவதும் மார்ச் 24 நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய நாளில் இருந்தே தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டிட வேலை உள்ளிட்ட பணிகளை செய்து வந்த வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர்.

இந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு வருகிற 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் மற்றும் உஜ்ஜைன் மாவட்டங்களுக்கு இடையிலான எல்லையில் போலீசார்  சட்டவிரோதமாக மக்கள் நடமாட்டம் இருக்கிறதா என்று வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.


போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கான்கிரீட் மிக்சர்  டிரக் வந்தது. போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.டிரைவர் முன்னுக்கு பின் பதில் அளித்ததால் போலீசார் சந்தேகமடைந்து சோதனை நடத்தினர். அப்போது  அதற்குள் தொழிலாளர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

கான்கிரீட் மூடியை திறந்த போது 18 பேர் தொழிலாளர்கள் உள்ளே அமர்ந்திருந்ந்தார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோ செல்வது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த வாகனத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அந்த வாகனத்தில் வந்தவர்கள்  தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் தொற்றுநோய்க்காக பரிசோதிக்கப்பட்டனர்.


Advertisement