கிடுகிடுவென உயரும் கொரோனா பாதிப்பு! இந்தியாவின் தற்போதைய நிலை என்ன?



172-people-affecting-by-coronovirus

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது.  இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவின் 45 பேருக்கும், கேரளாவில் 27 பேருக்கும், ஹரியானாவில் 17 பேருக்கும் கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

Coronovirus

மேலும் டெல்லியில் 12 பேருக்கும், கர்நாடகாவில் 14 பேருக்கும் உத்திரபிரதேசத்தில் 17 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து ராஜஸ்தானில் 7 பேரும், லடானில்  8 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 4 பேரும், தெலுங்கானாவில் 6 பேரும், தமிழ்நாட்டில் இருவரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டு,  தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

பஞ்சாப், மேற்கு வங்காளம், உத்தரகாண்ட், ஆந்திரா, ஒடிசா, பாண்டிச்சேரி பகுதிகளில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இன்றும் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர வைரசால் இந்தியாவில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.