இந்தியா Covid-19

கிராமத்தில் வசித்துவந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..! அதிர்ச்சி தகவல்.!

Summary:

17 people corono test positive in same family

பீகார் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 6,771 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 228 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவின் பிகார் மாநிலம், சிவான் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 11 வயது பெண் குழந்தை, 19, 22, 25 வயதுடைய இளம் பெண்கள், 19 வயதுடைய இளைஞர்கள், 60 வயதுடைய 2 முதியவர்கள் என மொத்தம் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஓமன் நாட்டில் இருந்து இந்தியா திரும்பிய கொரோனா நோயாளி ஒருவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என பிகார் சுகாதாரத் துறை முதன் செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.


Advertisement