19 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்ட 16 வயது சிறுவன்.! பெங்களூரில் நடந்த பகீர் சம்பவம்.!

19 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்ட 16 வயது சிறுவன்.! பெங்களூரில் நடந்த பகீர் சம்பவம்.!


16 years old boy marries 19 years old girl at bangalore

19 வயது இளம் பெண் ஒருவரை 16 வயது சிறுவன் ஒருவன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் அங்கிருக்கும் பகுதி ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டரை வீடுகளுக்குச் சென்று டெலிவிரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளான்.

இந்நிலையில் அந்த 16 வயது சிறுவனுக்கும், அந்த பகுதியில் இருக்கும் 19 வயது இளம் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்களின் காதல் குறித்து இரு வீட்டாருக்கும் தெரியவர, பெண்ணின் பெற்றோர் இவர்கள் காதலுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Mysteries

ஆனால், தங்கள் மகள் அந்த சிறுவனுடன் ஓடிவிட்டாள் பெரும் அவமானம் என கருதிய பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனுக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. எனினும், இந்த திருமணத்தை ஏற்க முடியாமல் பெண்ணின் பெற்றோர் நேபாளத்திற்கு சென்றுவிடனர்.

இந்நிலையில் 16 வயது சிறுவனுக்கும், 19 வயது பெண்ணிற்கும் திருமணம் நடந்த விஷயம் போலீசாருக்கு தெரியவர, சிறுவனின் வீட்டிற்கு சென்று விசாரித்த போலீசார், சிறுவனுக்கு 16 வயதுதான் ஆகிறது என்பதை உறுதி செய்த நிலையில் இளம்பெண் மற்றும் சிறுவனின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.