பலே ப்ளான்... கடத்தப்பட்டதாக நாடகமாடிய 16 வயது சிறுவன்... காவல்துறை நடவடிக்கையால் வெளியான உண்மை.!16-year-old-mumbai-boy-faking-his-kidnap-police-reveal

மும்பையைச் சார்ந்த 16 வயது சிறுவன் கடத்தல் நாடகம் ஆடியோ சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக விரைவான நடவடிக்கையில் இறங்கிய மும்பை போலீஸ் அந்த சிறுவனை மீட்டு பத்திரமாக  மும்பை அழைத்து வந்தனர்.

மும்பையில் சார்ந்த 16 வயது சிறுவன் ஒருவன்  தான் கடத்தப்பட்டதாக தனது பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறான். இதனைக் கண்டு பயந்தவர்கள் காவல்துறையிடம் இது பற்றி தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் குறுஞ்செய்தி வந்த  செல்போன் எண்ணை ட்ராக் செய்ததில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றன.

India

எனது பெற்றோர் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டதால் விரக்தியடைந்த சிறுவன் மும்பையிலிருந்து பெங்களூர் தப்பி சென்று இருக்கிறான். மேலும் தன்னை யாரோ கடத்தியது போல தனது பெற்றோரிடம் நாடகமாடியுள்ளான். நீங்கள் இனியும் நம்பிக்கை வைக்காதீர்கள் என்னால் தப்பித்து வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்று தனது பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறான்.

இது தொடர்பாக சிறுவனது பெற்றோர்கள் காவல்துறையை தொடர்பு கொண்ட போது  காவல்துறையினர் குறுஞ்செய்தி வந்த  செல்போன் எண்ணை வைத்து டிராக் செய்ததில் சிறுவன் கடத்தல் நாடகம் ஆடியது அம்பலம் ஆகியது. இதனைத் தொடர்ந்து சிறுவனை பத்திரமாக மீட்டு வந்த காவல்துறையினர் அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.