பீகாரில் பெய்துவரும் கனமழை... மின்னல் தாக்கி 16 பேர் பரிதாப பலி..! கடும் எச்சரிக்கை விடுத்த மாநில அரசு..!16-members-dead-by-lightning-attack

மின்னல் தாக்கி ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் தலைநகர் பாட்னா, மாதேபுரா, சீதாமாரி, கிஷன்கஞ்ச் போன்ற மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசு கேட்டுக் கொண்டதோடு, பல முயற்சிகளையும் செய்து வருகிறது.

Bihar

இந்த நிலையில் கடுமையான மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் மின்னல் தாக்கி பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இதுவரையிலும் மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 16 ஆக அதிகரித்துள்ளது. இதுபோன்று சட்டீஸ்கர் மாநிலத்திலும் மூன்று பேர் மின்னல் தாக்கி பலியானது குறிப்பிடத்தக்கது.