16 வயது சிறுமி 27 பேரால் பலாத்காரம் : அரசியல் புள்ளிகள் வரை தொடர்பா?.. மக்களை அதிரவைத்த சம்பவம்.!

16 வயது சிறுமி 27 பேரால் பலாத்காரம் : அரசியல் புள்ளிகள் வரை தொடர்பா?.. மக்களை அதிரவைத்த சம்பவம்.!


16-aged-minor-girl-forced-prostitution-27-raped-pondich

வீட்டில் நடந்த விபச்சாரத்தில் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுமி 27 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டது அம்பலமானது. இந்த சம்பவத்தில் அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

சுற்றுலா நகராக இருக்கும் புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் பல மாநிலங்களை சார்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை, விபச்சார தொழில் போன்றவையும் நடக்கிறது. ஸ்பா பெயரில் விபச்சார விடுதிகளும் செயல்படுகின்றன. 

இந்நிலையில், புதுச்சேரி கோரிமேடு மோகன் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் நடந்து வந்துள்ளது. இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் வீட்டில் சோதனை நடத்துகையில், 16 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது அம்பலமானது. சிறுமி மீட்கப்பட்டபோது அவரை வாடிக்கையாளர் என்ற பெயரில் காமுகன் பலாத்காரம் செய்துள்ளான்.

விசாரணையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி, அவரின் மனைவி உமா வாடகைக்கு வீடு எடுத்து, 16 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளியுள்ளனர் என்பது அம்பலமானது. 

Pondicherry

இதனையடுத்து, பாலாஜியை கைது செய்த காவல் துறையினர், அவரின் வாக்குமூலத்தின் பேரில் சிறுமியை பலாத்காரம் செய்த 27 பேரின் மீது வழக்குபதிந்துள்ளனர். இவர்களில் 22 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்ட நிலையில், பிறருக்கு வலைவீசப்பட்டுள்ளது. 

சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். புதுச்சேரியின் முக்கிய பகுதியில் விபச்சாரம் நடந்தது அம்பலமான நிலையில், இந்த சம்பவத்தில் சில அரசியல் புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.