16 வயது சிறுமி 7 மாதமாக பாலியல் பலாத்காரம்.. டியூசன் மாஸ்டரால் நேர்ந்த கொடுமை.. பதறிப்போன பெற்றோர்.!

16 வயது சிறுமி 7 மாதமாக பாலியல் பலாத்காரம்.. டியூசன் மாஸ்டரால் நேர்ந்த கொடுமை.. பதறிப்போன பெற்றோர்.!


16 Aged Child Sexual Abused by Tution Master

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ராயசோட்டியில் வசித்து வரும் 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இதே பகுதியை சேர்ந்தவர் அபிராம ரெட்டி. இவர் திருமணம் ஆகாதவர். அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து டியூசன் நடத்தி வந்துள்ளார். 

அபிராம ரெட்டியிடம் டியூசன் சேர்ந்து சிறுமி படிக்கச் தொடங்கிய நிலையில், கடந்த 7 மாதமாக காமுகன் சிறுமியிடம் ஆசை வார்த்தை பேசி நெருங்கி பழக தொடங்கியுள்ளான். மேலும், பிற மாணவர்கள் வீட்டிற்கு சென்றபின்னர், உனக்கு மட்டும் ஸ்பெஷல் டியூசன் என சில்மிசத்திலுடம் ஈடுபட்டு வந்துள்ளான். 

இவ்வாறாக கடந்த 7 மாதமாக காமுகன் சிறுமியிடம் அத்துமீறி நடந்து இருக்கிறான். இதனை வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறான். அப்பாவி சிறுமியிடம் பத்தாம் வகுப்பில் தோல்வியடைய செய்திடுவேன் என்றும் மிரட்டியுள்ளான்.

சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவின் படி சிறுமி 2 பாடங்களில் தோல்வியடைந்த நிலையில், அவரின் பெற்றோர் விசாரணை செய்தபோது பகீர் தகவல்கள் நடந்த கொடுமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ராயசோட்டி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அபிராம ரெட்டியை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.