நீதிபதி மீது பாலியல் புகார்! நீதிமன்றத்திற்கு வெளியே 144 தடை உத்தரவு!

144 in front of court


144 in front of court


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது, முன்னாள் பெண் உதவியாளர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில், அந்தப் பெண்ணின் புகாரை  உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

மேலும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் நன்மதிப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர்மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதன் பின்னணியில் உள்ள சதி தொடர்பாக  விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது. 

இந்நிலையில் இன்று ரஞ்சன் கோகோயிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணை நடைமுறையை எதிர்த்து வழக்கறிஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தின் முன் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.