திடீரென போடப்பட்ட 144 தடை உத்தரவு! அனைத்து மதுபானக் கடைகளும், பார்களும் மூட உத்தரவு!144 in bangaluru


கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் திடீரென 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என போலீஸ் கமிஷன்ர் தெரிவித்துள்ளார்.

144

குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவிருக்கும் நிலையில், பெங்களூர் நகரம் முழுக்க இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தடை உத்தரவை முன்னிட்டு, அனைத்து மதுபானக் கடைகளும், பார்களும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சட்டத்தைமீறுபவர்கள் மீது த்குந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.