
14 train cancelled for coronovirus
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகெங்கும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் இதுவரை கொரோனா வைரசால் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகமாகக் கூடும் நிகழ்ச்சிகளை தடை செய்யவும், தேவையில்லா பயணங்களை தடை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் பலரும் தங்களது பயணங்களை குறைத்துள்ளனர். இதனால் ரயில் பயணிகளின் வரத்தும் குறைந்துள்ளது. இந்நிலையில் 14 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதாவது கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கையாக திருப்பதி, ஹைதராபாத், திருச்சிராப்பள்ளி, சம்பல்பூர், பனஸ்வாடி, செகந்திராபாத், திருவனந்தபுரம், ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இயங்கும் சில ரயில்களின் சேவையை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement