இந்தியா

13 இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஸ்பா உரிமையாளர்! போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை!

Summary:

13 Girls rescued from illegal spa from delhi

டெல்லியில் ஸ்பா என்ற பெயரில் தகாத செயலில் ஈடுபட்டு வந்த பெண்களை போலீசார் மீட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னனர் அவசர அழைப்பு மூலம் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர் டெல்லியில் குறிப்பிட்ட இடத்தில் உள்ள பிரபல மால் ஒன்றில் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக கூறியுள்ளார்.

தான் அந்த ஸ்பா சென்டருக்கு மசாஜ் செய்ய சென்றிருந்ததாகவும், அங்கிருந்த 13 பெண்களுக்கு ஆளுக்கு தகுந்தாற்போல் அந்த ஸ்பா உரிமையாளர் தன்னிடம் விலை பேசியதாகவும் அந்த பத்திரிகையாளர் காவல் துறையிடம் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட அழைப்பை ஏற்று அந்த ஸ்பாவிக்ரு சென்ற போலீசார் அங்கு விபச்சாரம் நடப்பதை உறுதி செய்தனர். மேலும் அங்கிருந்த 13 இளம் பெண்களையும் போலீசார் மீட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நேபாளம் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. அதேசமயம், குறிப்பிட்ட ஸ்பாவின் உரிமையாளர் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவரை போலீசார் தேடிவருகின்றனர்.


Advertisement