தமிழகம்

முட்புதரில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்த 12-ஆம் வகுப்பு மாணவி.! அதிர்ச்சி சம்பவம்.!

Summary:

கேரளாவில் 12-ஆம் வகுப்பு மாணவி முட்புதரில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவரது 17 வயது மகள் ரேஷ்மா இடுக்கி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்குச்சென்ற மாணவி, வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்தநிலையில் அந்த மாணவி பள்ளிவாசல் பகுதியில் உள்ள முட்புதரில் நெஞ்சில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அந்த சடலத்தின் அருகே செல் போன் ஒன்று கிடந்துள்ளது. அந்த செல்போன் யாருடையது என்பது குறித்து விசாரித்தபோது மாணவியின் உறவினரான அனு என்பவருடையது என தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் அந்த மாணவி பள்ளியில் இருந்து வீடு திரும்பிய வழியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது அந்த மாணவியுடன் அனு நடந்து செல்வது தெரியவந்தது. ஆனால் அனு தற்போது எங்கு இருக்கிறார் எனபது குறித்து தெரியவில்லை. இதனால் போலீசார் அனுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Advertisement