யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 124 ரவுடிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை!

யோகி ஆதித்யநாத் ஆட்சியில் 124 ரவுடிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை!



124 criminals killed in UP

யோகி ஆதித்தியநாத் இந்திய இந்து சமயக் குருக்களும், இந்துத்துவத்தை அடையாளப்படுத்தும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2017 மார்ச் 19 முதல் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சராக உள்ளார்.

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 42 மாதங்களில் மட்டும் சுமார் 124 ரவுடிகள் போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.

up

இத்தகைய கடும் நடவடிக்கை, குற்றவாளிகளுக்கு எதிராக அரசின் சகிப்பின்மையை காட்டுவதாக கூறியுள்ள போலீசார், இது எதிர்காலத்திலும் தொடரும் எனவும் குறிப்பிட்டு உள்ளனர். மேலும், சாதி, மதத்தின் அடிப்படையில் குற்றவாளிகளின் மீது எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.