
12 person died in acccccident
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் மாவட்டத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, மினி வேன் மீது மோதியதில் பேருந்தில் பயணம் செய்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள சிந்தாமணியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று சிக்பள்ளாபூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.அப்போது, எதிர் திசையில் வந்த மினி வேன் எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
திடீரென நடந்த இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்துக்குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீ்ட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
காவல்துறையினர் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சாலை விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் சிக்பள்ளாபூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement