இந்தியா

11 வயது சிறுமி வெட்டிகொலை! இவர்தான் கொன்றாரா? விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மைகள்!

Summary:

11 year child killed by sister and his lover

சத்தீஸ்கர் மாநிலத்தில் 11 வயது சிறுமி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது 16 வயது சகோதரியும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
சத்தீஸ்கர் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு 11 வயது சிறுமி வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 

அதனை தொடர்ந்து போலீசார்கள் விசாரணை மேற்கொண்ட நிலையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தங்களது பெற்றோர் கோவிலுக்கு சென்ற நிலையில் 11 வயது மற்றும் 16 வயது நிறைந்த சகோதரிகள் இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில் 16 வயது சிறுமிக்கு கோர்பா பகுதியை சேர்ந்த வினாய் ஜகத் என்பவருடன் பழக்கம் இருந்து வந்துள்ளது. 

அதனை தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அந்த இளைஞன் வீட்டிற்கு வந்து 16 வயது சிறுமியுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை அவரது சகோதரி கண்டுள்ளார். இந்நிலையில் தங்கை இதுகுறித்து தனது பெற்றோரிடம்  சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில் 16 வயது சிறுமி தனது காதலனுடன் சேர்ந்து 11 வயது சிறுமியை கொலை செய்துள்ளனர்.

பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது மொபைல் போன் பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறில் தான்தான்  சகோதரியை வெட்டிகொன்றதாக போலிசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் நடந்த அனைத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார்கள் 16 வயது சிறுமி மற்றும் அவரது காதலனை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement