பஞ்சாயத்து துணைத் தலை­வர் கொலைக்கு பழிக்குப்பழி.! 10 பேர் உயிரோடு எரித்துக்கொலை.! கொடூரச் சம்பவம்.!

பஞ்சாயத்து துணைத் தலை­வர் கொலைக்கு பழிக்குப்பழி.! 10 பேர் உயிரோடு எரித்துக்கொலை.! கொடூரச் சம்பவம்.!


10-people-mueder-in-west-bengal

மேற்கு வங்காள மாநிலம்  பிர்பம் மாவட்டம் ராம்பூர்ஹத்தில் உள்ள பர்ஷல் கிராமத்தின் துணைத் தலைவராக இருந்தவர் பாதுஷேக். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் பாதுஷேக் மீது வெடிகுண்டு வீசி  பயங்கரதாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பாது ஷேய்க் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாதுஷேக் கொல்லப்பட்ட தகவல் அறிந்தவுடன், அவரது சொந்த கிராமமான பாக்துய் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆத்திரத்தில் அதே கிராமத்தில் சிலரின் வீடுகளுக்கு தீவைத்தனர். தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. அதன் பிறகு வீடுகளுக்குள் தேடி பார்த்ததில், தீயில் கருகி இறந்த நிலையில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

தீயில் கருகி இறந்தவர்களில் பல உடல்­கள் அடை­யா­ளம் காண முடி­யாத அள­வுக்கு கரு­கி­ விட்­ட­தா­க­வும் ஒரு வீட்­டி­லி­ருந்து மட்­டும் 7 உடல்­க­ள் கைப்­பற்­றபட்டதாகவும் தக­வல்­கள் வெளியாகியுள்ளது. கிரா­மத் துணைத் தலை­வர் கொலை செய்­யப்­பட்ட சம்பவத்திற்கு பழிக்குப்பழி நடந்த கொடூரச்சம்பவம் நாடுமுழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.