பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
12 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பங்கு சந்தையில் ஏற்ப்பட்ட மாற்றம்!
கொரோனா வைரஸ் கோர தாண்டவத்தால் இந்திய பங்கு சந்தை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய பங்கு சந்தையில் ஏற்ப்பட்டது போலவே தற்போதும் நடைப்பெற்றுள்ளது. அதாவது பங்கு சந்தைகளின் கடும் வீழ்ச்சியால் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3090 புள்ளிகள் சரிந்து 29,687 புள்ளிகளில் வர்த்தகம் உள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 966 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது 8,624 புள்ளிகளில் வர்த்தகம் உள்ளது.
மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ.74.43 ஆக வீழ்ச்சி அடைந்து உள்ளது. பங்கு சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது பலருக்கும் பலவிதமான இழப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.