தமிழகம் மருத்துவம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா? விளக்கமளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

Summary:

vjayabaskar talk about corona virus

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று சேலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். சீனா மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கும் நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை நேரடி கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும் கூறினார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


Advertisement