வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?


vendayam-health-tips

நாம் அன்றாட பயன்படுத்தும் வெந்தயம் உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் தருவதோடு நம் உடல் நலத்திற்கும் ஏராளமான நன்மைகளை வாரி வழங்குகிறது.

முக்கியமாக இரவில் படுக்கும் முன் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த நீரைப் பருகினாலும் நாம் உடலுக்கு பலதார பட்ட நன்மைகள் கிடைக்கின்றன.

vendayam

அவற்றை பற்றி இங்கு பார்ப்போம்:
1. நம்மில் பல பேருக்கு கொழுப்பு பிரச்சனைகள் தான் அதிகம் காணப்படுகிறது. அத்தகைய கொழுப்பு  பிரச்சனைகளை வெந்தயம் போக்கும். மேலும் ஆய்வுகளிலும் வெந்தயத்தில் உள்ள உட்பொருட்கள், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இதற்கு வெந்தயத்தில் உள்ள ஸ்டெராய்டல் சாப்போனின்கள் தான் காரணம். இவை தான் கெட்ட கொலஸ்ட்ராலை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கும்.

2. வெந்தயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்களான சாப்போனின்கள், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றச் செய்து, குடல் புற்றுநோயில் இருந்து நம்மை விலகி இருக்கச் செய்யும்.