மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்.!

Summary:

Symptoms of twin babies in tamil

கர்ப்பமாக இருக்கும் பெண்ணின் வயிற்றில் இரட்டை குழந்தைகள் உள்ளதை பின்வரும் சில அறிகுறிகளை வைத்து உணரமுடியும்.

1 . அதிக வாந்தி அல்லது குமட்டல்.
பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் இதுபோன்ற வாந்தி, குமட்டல் போன்றவை சாதாரண ஒன்றுதான். அதுவே அதிக அளவில் வாந்தி அல்லது குமட்டல் இருந்தால் வயிற்றில் இருப்பது இரட்டை குழந்தை என்பதற்கான ஒரு அறிகுறி.

2 . பெண்ணின் உடல் எடை.
கர்ப்பகாலத்தில் பெண்கள் வழக்கத்தைவிட எடை அதிகரிப்பது சாதாரண ஓன்று. அதுவே கர்ப்பமாக இருக்கும் பெண் அதிக அளவில் எடை கூடினால் அதுவும் வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பதற்கான அறிகுறிகளில் ஓன்று.

3 . அதிக அளவிலான களைப்பு.

இரட்டை குழந்தைகளை வயிற்றில் இருக்கும் பட்சத்தில் ஒரு பெண் அதிக அளவிலான களைப்பை உணர்வதாக கூறுகின்றனர். அதிலும், முதல் மூன்று மாதங்களில் உடலில் அதிக களைப்பு ஏற்பட்டால் அதுவும் வயிற்றில் இரட்டை குழந்தை இருப்பதற்கான ஒரு அறிகுறி.


Advertisement