உணவே மருந்து: செரிமானம் உள்ளிட்ட அத்தனை பிரச்சனைக்கும் தீர்வளிக்கும் பீர்க்கங்காய்..!

உணவே மருந்து: செரிமானம் உள்ளிட்ட அத்தனை பிரச்சனைக்கும் தீர்வளிக்கும் பீர்க்கங்காய்..!

luffa is a fruit that can correct digestive problems

வெள்ளரி வகையை சேர்ந்த பீர்க்கங்காய் செரிமான பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய காய் வகைகளில் சிறந்ததாக கருதப்படுகிறது.

100 கிராம் பீர்க்கங்காயில் 20 கலோரிகளை மட்டுமே உள்ளன. அதன் மென்மையான சதை பகுதி ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதோடு, மிதமான அளவு தாதுக்கள் மற்றும் வைட்டமின் களையும் கொண்டுள்ளது.

பீர்க்கங்காயில் கரோட்டின், லுடீன் மற்றும் கிரிப்டோ-சாந்தின் பினாலிக் போன்ற ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாக்கும்.

மேலும் இது மிதமான அளவு தையமின், நியாசின் (வைட்டமின் பி -3), பாந்தோத்தேனிக் அமிலம் (வைட்டமின் பி -5), பைரிடாக்சின் (வைட்டமின் பி -6) போன்ற பி வைட்டமின்களையும் மற்றும் கால்சியம், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களையும் கொண்டுள்ளது.

பீர்க்கங்காயில் அதிக வைட்டமின் ஏ உள்ளது. 100 கிராம் பீர்க்கங்காயில் 410 IU வைட்டமின் ஏ, மற்றும் 12 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது.

மேலும் இது மிதமான அளவு தையமின், நியாசின் (வைட்டமின் பி -3), பாந்தோத்தேனிக் அமிலம் (வைட்டமின் பி -5), பைரிடாக்சின் (வைட்டமின் பி -6) போன்ற பி வைட்டமின்களையும் மற்றும் கால்சியம், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களையும் கொண்டுள்ளது.

இதய நோய்கள் உள்ளவர்களுக்கு சிறந்த காய் வகையாகும். பீர்க்கங் காயில் மற்ற காய்கறிகளை விட குறைந்த அளவு கொழுப்பு உள்ளது. இதய நோய்களிலிருந்து பாதுகாக்கும் சிறந்த காய்வகைகளில் இதுவும் ஒன்றாகும்.

பீர்க்கங்காயில் ஒவ்வாமை எதிர் பன்புகள் உள்ளன. அவற்றை வழக்கமாக உணவில் சேர்த்து கொள்வது அரிப்பு போன்ற ஒவ்வாமைகளை போக்க உதவும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக்கொள்வது புண்கள் மற்றும் அஜீரணத்திற்கு சிகிச்சையளிக்க உதவும் என்று நம்பப்படுகிறது.