
புதுமண தம்பதிகள் கருவுற சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன?.. அசத்தல் டிப்ஸ்.!!
திருமணமான புதுமண தம்பதிகள் குறிப்பிட்ட உணவுகளை சாப்பிட்டால் கருத்தரிப்பு வாய்ப்புகள் அதிகரிக்கும். இன்றளவில் பல தம்பதிகளுக்கு ஏற்பட்டுள்ள கருவுறுதல் பிரச்சனையை தவிர்க்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. தினமும் கருவுறுத்தலுக்கான உணவுகளை சாப்பிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. எந்த வகை உணவுகளை சாப்பிடுவது என்பது குறித்து இன்று காணலாம்.
மாதுளைப்பழம்:
மாதுளைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி செய்யும். மேலும், பெண்களுக்கு கருப்பையை வலுப்பெற செய்கிறது.
பால் பொருட்கள்:
பாலில் இருக்கும் வைட்டமின்கள் ஆண் - பெண்ணின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்க உதவி செய்கிறது. இதனால் பெண்கள் கருவுற வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
பேரிட்சைபழம்:
பேரிட்சை பழத்தில் இருக்கும் வைட்டமின் மற்றும் தாதுக்கள், கர்ப்பத்தின் ஆரம்ப நிலைகளில் இருந்து உதவி செய்கிறது. கருப்பையின் உறுதியை பாதுகாத்து, கரு நின்ற பிறகும் அதன் உறுதி தன்மையை அதிகரிக்க உதவி செய்கிறது.
சிட்ரஸ்:
சாத்துக்குடி மற்றும் ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் உறுப்பின் இனப்பெருக்க செயல்பாடு துரிதமாகும். இது மருத்துவ ஆய்வுகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. சிட்ரஸ் பழங்களில் பெண்களுக்கு உதவும் வைட்டமின் சி இருக்கிறது.
Advertisement
Advertisement