ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
காற்று வழியாக பரவும் கொரோனா! பீதி அடைய தேவையில்லை! எதுபோன்ற இடங்களை தவிர்க்க வேண்டும்? நிபுணர்கள் கூறுவது என்ன?
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.20 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5.5 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்தநிலையில், காற்றின்வழியே கொரோனா தொற்று பரவும் என்ற கருத்து, கடந்த ஏப்ரல் மாதம் முதன்முறையாக எழுந்தது. ஆனால் இதை அப்போது ஒப்புக்கொள்ள உலக சுகாதார நிறுவனம் தயங்கியது. இந்தநிலையில், காற்றில் சிறிய துகள்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதற்கான ஆதாரத்துடன் 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
இந்தநிலையில், கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவலுக்கான வாய்ப்புகளை உலக சுகாதார அமைப்பு ஒப்புக் கொண்டு உள்ளது. இதை தொடர்ந்து மக்களிடையே பீதி நிலவுகிறது. இருப்பினும், இந்தியாவின் சி.எஸ்.ஐ.ஆர்-செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலின் மைய நிபுணர்கள் இதுகுறித்து பீதியடைய தேவையில்லை என்று கூறி உள்ளனர்.
மேலும், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். சமூக விலகலை எல்லா நிலையிலும் பராமரிக்க வேண்டும், மக்கள் அதிகம் இருக்கும் குறிப்பாக ஏசி அறைகள் போன்ற காற்றோட்டம் இல்லாத அறைகளை மக்கள் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார். முறையான சமூக விலகலை கடைபிடித்து, சுகாதாரத்துறை சொல்வது அனைத்தையும் கடைபிடித்து, கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்போம் என தன்னார்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.