அம்மாடியோவ்.. கசப்பு பாகற்காயில் இவ்வுளவு நன்மையா?.. கசப்பே தெரியாமல் சமைக்கலாமா?.!

அம்மாடியோவ்.. கசப்பு பாகற்காயில் இவ்வுளவு நன்மையா?.. கசப்பே தெரியாமல் சமைக்கலாமா?.!



Benefits of Paakarkaai or Momordica charantia

இந்திய உணவுகளில் பிரதானமாக பயன்படுத்தப்படும் பாகற்காயில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதனை பெரும்பாலானோர் மற்றும் குழந்தைகள் அதில் உள்ள கசப்புத்தன்மை காரணமாக ஒதுக்கி வைப்பார்கள். ஆனால், அதில் உள்ள மருத்துவ குணத்தை தெரிந்துகொண்டால், மிகவும் விறுவிறுப்புடன் அதனை சாப்பிடலாம். 

பாகற்காயில் மிதி பாகற்காய், கொடி பாகற்காய் என்ற இரண்டு வகை பாகற்காய்கள் உள்ளன. இவை இரண்டும் ஒரே பலனை தருகிறது. வயிற்றில் உருவாகும் பூச்சிகளை அழித்து, குடல் புழுக்கள் நீங்குகிறது. வயிற்றுப்புண் பிரச்சனை சரியாகிறது. கல்லீரல், கண்நோய், பக்கவாதம் நோய் கட்டுப்படும். 

health tips

தினமும் பாகற்காய் சாறுடன், சிறிதளவு எலுமிச்சம்பழச்சாறு கலந்து குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும். சொறி மற்றும் சிரங்கு ஆறும். பாகற்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இரத்த சோகை, காசநோய் போன்ற பிரச்சனைகள் சரியாகும். 

பாகற்காய் சாறுடன் வெந்தயம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும். பாகற்காயை வில்லையாக நறுக்கி, காயவைத்து பொடியாக அரைத்து பாலில் கலந்து குடித்தால் நீரிழிவு நோய் கட்டப்படும். 

health tips

பாகற்காய் கசப்பு தெரியாமல் சமைக்க, அதனை வெங்காயம் மற்றும் தக்காளியுடன் சேர்த்து முதலியியே வதக்கி சமைக்கலாம். பொரியல் போன்ற பதார்தத்தில் தேங்காய்த்துருவல், கேரட் துருவல், வெல்லம் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.  

பாகற்காயை நறுக்கி உப்பு மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து கிளறிவிட்டு, சிறிதுநேரம் கழித்து அதனை பிழிந்து எடுத்தால் கசப்பு சுவை மாயமாகிவிடும். மோரில் உப்பு சேர்த்து ஊறவைத்து காயவைத்தால் பாகற்காய் வற்றல் தயாராகிவிடும்.