
alcohol is dangeour to health
சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல், தற்போது கொரோனா வைரஸால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 3500க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் இதுவரை 39 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதால் நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அணைத்து மக்களும் கொரோனா வைரஸை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் அடிக்கடி கேட்டுக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸை தடுக்க நமது உடலில் அதிகப்படியான எதிர்ப்புசக்திகள் தேவை என்பது அவசியம். எனவே உடலுக்கு ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். மது, புகையிலை போன்ற கெட்டபழக்கங்களை உடனே விட்டுவிடுங்கள்.
மது அருந்துபவர்களுக்கு எந்த வைரஸும் தாக்காது என்ற முட்டாள்தனமான முடிவை யாரும் எடுக்காதீர்கள். மது அருந்துவதால் கண்டிப்பாக உடலில் எதிர்ப்பு சக்தி குறையும். எனவே மதுபழக்கத்தை கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள். இது உங்கள் ஒருவரின் உயிர் சம்பத்தப்பட்ட விஷயம் அல்ல, உங்களின் கெட்டபழக்கம் நம் தேசத்தையும் பாதிக்கும்.
Advertisement
Advertisement