#HealthTips: 60 வயதிலும் உடற்பயிற்சி அவசியம்.. காரணம் ஏன்?.. கவலையை விட்டொழிய ஒரேவழி.!

#HealthTips: 60 வயதிலும் உடற்பயிற்சி அவசியம்.. காரணம் ஏன்?.. கவலையை விட்டொழிய ஒரேவழி.!



60 Aged Peoples Benefits of Walking

 

உடற்பயிற்சி நமது உடலை திடகாத்திடமாக வைக்க உதவும். 60 வயதில் உடற்பயிற்சி செய்யலாமா? வேண்டாமா? என்ற சந்தேகத்தில் இருப்பவர்களுக்கு சந்தேகமே இல்லாமல் தெரிவிக்கும் பதில் எந்த சூழலிலும் அதனை கைவிட வேண்டாம் என்பது மட்டும் தான். உடற்பயிற்சி தசைகளை வலுவாக்க உதவும், எலும்புகளை பலப்படுத்தும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். 

health tips

60 வயதை கடந்தவர்கள்ளுக்கு இயற்கையாகவே பல்வேறு உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். அதனை தவிர்க்க உடற்பயிற்சி அவசியம். இது மன நலனுக்கும் கைகொடுக்கும். தண்டுவட பிரச்சனை, மூட்டு பிரச்சனை போன்றவை தலைதூக்கும் 60-களில் உடற்பயிற்சியே அதனை தவிர்க்க வழிவகை செய்யும்.

health tips

அதனைப்போல, இதயத்துடிப்பினை சீராக்கவும், தசைகள் & எலும்புகளை வலுப்பெற செய்யவும் உதவும். 8 என்ற எண்ணின் வடிவத்தை வீட்டின் மொட்டை மாடியில் போட்டுவைத்து, அதன் மீது நடந்து வரலாம். காலை & மாலை வேளைகளில் கட்டாயம் உடற்பயிற்சி செய்யலாம். பிடித்த பாடல்களை கேட்டவாறு அதனை மேற்கொள்ளலாம்.