காதலிக்கும் பெண்களே உஷார்..!! உங்கள் காதலரை பற்றி தெரிந்துகொள்ள சில டிப்ஸ்

காதலிக்கும் பெண்களே உஷார்..!! உங்கள் காதலரை பற்றி தெரிந்துகொள்ள சில டிப்ஸ்


advice-for-girls-on-handling-boys

தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதில் ஆண்களை விட பெண்கள்  பலகீனமானவர்களே. சில ஆண்கள் மட்டும் தான் தன்  மனதில்  தோன்றியதையெல்லாம் மறைக்காமல் உளறிக் கொட்டுவார்கள். அதற்குக் காரணம் அவர்களின் அலட்சியம் தான்.

உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆண்கள்  மேற்கொள்வதே கிடையாது. அப்படிப்பட்டவர்களின் காதலை எப்படி உறுதி  செய்து கொள்வது என்ற குழப்பதில் இருந்தால், உங்கள் காதலரிடம் கீழ்கண்ட அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என்று பாருங்கள். அதையே உங்கள் காதலின் கன்ஃபர்மேஷனாக எடுத்துக் கொள்ளுங்கள்.

காதலில் மிக முக்கியம் நேர்மை தான். உங்கள் காதலர் செய்யும் தவறுகளுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு, இனிக்க இனிக்க பேசும் வித்தைக்காரராக இருந்தால், அவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருங்கள். தான் என்ன செய்கிறேன் என்று வெளிப்படையாகப் பேசும் ஆண்களை தாராளமாக நம்பலாம்.

இனிக்க இனிக்க பேசுபவர்கள் எப்போது விளையாட்டாக பேசுகிறார்கள், எப்போது உண்மையாக இருக்கிறார்கள் என்றே தெரியாது. அதனால் அந்த ரிஸ்கையே எடுக்க வேண்டாம். உங்களிடம் நேர்மையாகவும், நீங்கள் குழப்பத்தில் இருக்கும் போது, அதைப் புரிந்துகொண்டு உங்களுக்கு அறிவுரை கூறுபவரையும் நீங்கள் தாராளமாக நம்பலாம். அவர் உங்களை மனதில் ஏற்றுக்கொண்டதற்கான அறிகுறிகளில் அதுவும் ஒன்று.

உங்களுடைய மனக்குழப்பங்களைப் புரிந்து கொள்வது போலவே, அவருடைய எண்ணங்களையும் அவருடைய பிரச்னைகளையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறாரா? அப்படி நடந்தால், நீங்கள் அவருடைய மனதில் இன்னும்படி மேலே போய் அமர்ந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

Love tips in tamil

ஏதேனும் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் உங்களுக்கு நேரும்போது, உங்களுக்குத் துணையாக இருந்து வழி நடத்தபவராகவோ அல்லது உயரிய ஆலோசனைகளை வழங்குபவராகவோ இருந்தால், அவர் உங்களுடைய இன்ப துன்பங்களில் பங்கெடுக்க விரும்புகிறார் என்று அர்த்தம்.

எவ்வளவு சீரியஸான ஆளாக இருந்தாலும் காதல் வந்துவிட்டால் சிறு பிள்ளைத்தனமும் கூடவே சேர்ந்து வருவதும் உண்டு. என்ன பேசுவதென்றே தெரியாமல், காரணமே இல்லாமல் அடிக்கடி போன் செய்வார்கள். என்னவென்று கேட்டால் எதுவும் சொல்லத் தெரியாமல் அசடு வழிவார்கள். அதில் உங்கள் மீதான அன்பும் அடங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

காரணம் ஏதுமில்லாமல், பேசுவதற்கு விஷயம் ஏதும் இல்லாத போதும் உங்களைப் பார்க்க வருகிறாரா? உங்களிடம் பேசிக்கொண்டிருப்பதை விரும்புகிறாரா? எதையும் செய்வதற்கு முன்பாக, உங்களிடம் சொல்லிவிட்டு செய்கிறாரா? அப்போ நிச்சயமாக அவர் உங்களுடன் தன்னுடைய வாழ்க்கையின் எல்லா தருணங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார் என்பதை உணர்ந்து கொண்டு செயல்படுங்கள். அப்படிப்பட்ட ஆண்கள் தங்களுடைய முடிவில் மிகத் தெளிவாக இருப்பார்கள்.

Love tips in tamil

இந்த அறிகுறிகள் எல்லாம் தென்பட்டால் உங்கள் காதலருக்கு உங்கள் மீது காதல் தீ பற்றிக் கொண்டது என்று அர்த்தம். அன்போடு அவரை அணைத்துக் கொள்ளுங்கள்

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.