மக்கள் இதை செய்தாலே கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம்..! இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தகவல்..! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா மருத்துவம் லைப் ஸ்டைல் Corono+

மக்கள் இதை செய்தாலே கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம்..! இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தகவல்..!

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 562 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில், மதுரையை சேர்ந்த நபர் இன்று உயிர் இழந்துள்ளார்.

இப்படி பீதியை கிளப்பிவரும் கொரோனாவை தடுக்க இன்றில் இருந்து அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது இந்திய அரசு. இந்த ஊரடங்கு உத்தரவு கொரோனாவை கட்டுப்படுத்துமா என பலரும் பலவிதமான கேள்விகளை கேட்டுவருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் அனைவரும் வீட்டுக்குள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு இருந்தாலே கொரோனா பரவுவதை குறைக்க முடியும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அனைவரும் முறையாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதன் மூலம், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களை எளிதில் அடையாளம் காணமுடியும் எனவும், புதிதாக யாரும் பாதிக்கப்பட்ட வாய்ப்பில்லை எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo