சினிமா

மாபெரும் வெற்றி படங்களை கைப்பற்றி தெறிக்கவிடும் ஜீ தமிழ்! எந்தெந்த திரைப்படங்கள் தெரியுமா?

Summary:

zee tamil get three hit movie

தற்போது தமிழ் மட்டுமின்றி இந்திய அளவில் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஏராளமான ரசிகர்களை  கொண்டு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் இதில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் இதில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல்  மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்று சன் டிவியின் டிஆர்பியை முந்தி ஜீ தமிழ் முதல் இடம் பெற்றது.இவ்வாறு வித்தியாசமான நிகழ்ச்சிகளாலும், விறுவிறுப்பான தொடர்களாலும் ஜீ தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களை தனது பக்கம் கட்டி இழுத்துக் கொண்டிருக்கிறது.

2.o க்கான பட முடிவு

இந்நிலையில் சினிமாவில் வெளிவந்து ஒரு சில மாதங்களே ஆன மாபெரும் வெற்றி திரைப்படங்களை மற்ற தொலைக்காட்சிகளுக்கு போட்டியாக ஜீதமிழ் தொலைக்காட்சி கைப்பற்றி வருகிறது.

ஜீதமிழ் முதலில் மெகா ஹிட் கொடுத்த ரஜினி நடிப்பில் மாபெரும் பிரம்மாண்டமாக உருவான 2.O திரைப்படத்தை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தற்போது தில்லுக்குதுட்டு௨, கனா  ஆகிய படங்களையும் கைப்பற்றியுள்ளது.


Advertisement