சினிமா

முதன் முறையாக வெளியான இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் அழகிய மகள் புகைப்படம்!

Summary:

Yuvan sankar raja baby photo goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளர்களின் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இவர் இசைஞானி இளையராஜாவின் மகன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். யுவன் சங்கர் ராஜா இசை வெளியாகும் அனைத்து பாடல்களும் பெரும்பாலும் ரசிகர்களை மனதை கவர்ந்து மாபெரும் வெற்றிபெறுகின்றது.

அரவிந்ததன் என்ற படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமான யுவன்சங்கர் ராஜா இன்று தமிழ் சினிமாவின் அணைத்து பிரபலங்களுக்கும் இசை அமைத்துவிட்டார். சமீபத்தில் இவர் இசையில் வெளியான மாறி 2 படத்தில் வரும் ரவுடி பேபி பாடல் உலகளவில் சாதனை படைத்து அதிக பார்வையாளர்களை கொண்ட பாடல் என்று பெருமையை பெற்றுள்ளது.

https://cdn.tamilspark.com/media/17301uw6-IMG_5457-2.jpg

யுவன் சங்கர் ராஜா கடந்த 2005 ஆம் ஆண்டு சுஜையா சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னார் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன்பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஷில்பா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தார் யுவன். பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு சப்ருன் நிஷா என்ற பெண்ணை மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொண்டார் யுவன் சங்கர் ராஜா. இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அழகிய பெண்குழந்தை பிறந்தது.

இதுவரை அதிகம் வெளிவராத அந்த குழந்தையின் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.


Advertisement