வாரிசு படத்தின் வசூலை கேலி செய்த ப்ளு சட்டை மாறன்.! விஜய் ரசிகர்களால் தாக்குதல்.?!you-tuber-criticised-vaarisu-movie

கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்து வாரிசு படம் பொங்கலுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

நடிகர் ஷ்யாம், சரத்குமார் ஆகிய பிரபல நடிகர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வாரிசு திரைப்படத்தை குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக பல ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் சில ரசிகர்கள் தொலைக்காட்சி தொடர் போல் விமர்சித்து வருகின்றனர்.  

  விஜய்
இப்படத்தின் வசூல் ₹.300கோடியை தாண்டிவிட்டது என்று படக்குழுவினரால் கூறப்படுகிறது. இந்த நிலையில் யூ டியூப்பில் திரைபட விமர்சகராக இருக்கின்ற புளூ சட்டை மாரன் பல படங்களை விமர்சித்து அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார்.
 விஜய்
அதே போல தற்போது வாரிசு படத்தின் ₹.300 கோடி வசூலை விமர்சித்து புளூ சட்டை மாறன் அவருக்கே உரித்தான பாணியில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் "300 கோடி. உலக மகா உருட்டு" என்று ட்விட் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் இவரை சமூக வலைதளங்களில் தாக்கி, ட்ரோல் செய்து வருகின்றனர்.