வெளியானது யோகி பாபுவின் தர்ம பிரபு டீசர்; செம காமெடி கண்டிப்பா ஹிட்தா போல.!

வெளியானது யோகி பாபுவின் தர்ம பிரபு டீசர்; செம காமெடி கண்டிப்பா ஹிட்தா போல.!



yoki-babu-new-movie---therma-prabhu---teaser-release

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் யோகி பாபு. சாதாரண ஒரு நடிகனாக சினிமாவில் அறிமுகமான இவர் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு யாமிருக்க பயமேன் என்றே படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் யோகிபாபு.

மேலும், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. அதுமட்டும் இல்லாமல் தனி ஒரு நடிகராகவும் ஒருசில படங்களில் நடித்துவருகிறார்.

தற்போது, இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் தர்மபிரபு படத்தில் எமதர்மராஜா போன்ற ஒரு வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் மே மாதம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் யோகி பாபுவுடன் இணைந்து ரமேஷ் திலக், மனோ பாலா, ராதா ரவி, ரேக்கா, ஜனனி ஐயர் சாம் ஜோன்ஸ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.