சினிமா

அடேங்கப்பா.. என்னா அடி! யோகிபாபுவிற்குள் இப்படியொரு திறமையா! வீடியோவை கண்டு மெர்சலான ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் தனது காமெடியால் அனைவரையும் அசர வைத்து கவுண்டமணி,

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் தனது காமெடியால் அனைவரையும் அசர வைத்து கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் முன்னணி காமெடி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் யோகிபாபு. இவர் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்களின் படங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து ஹீரோவாக அவதாரமெடுத்த நடிகர் யோகிபாபு கோலமாவு கோகிலா, தர்மபிரபு, கூர்கா ஆகிய படங்களில் அருமையாக நடித்திருந்தார். மேலும் இறுதியாக அவர் மண்டேலா என்ற படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர். நடிகர் யோகிபாபு கைவசம் தற்போது அரண்மனை-3, கடைசி விவசாயி, டிக்கிலோனா உள்ளிட்ட பல படங்கள் தற்போது உள்ளன.

இந்நிலையில் சினிமாத்துறையில் முன்னணி நட்சத்திரமாக, செம பிசியாக வலம்வரும் நடிகர் யோகிபாபு மைதானத்தில் அசத்தலாக கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து பெருமளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement