சினிமா

காமெடி நடிகர் ஓகேதான்.. ஆனா அந்த நடிகர்கள் போல நடிக்கணும்னு ரொம்ப ஆசை! அட.. யோகிபாபு கூறியதை பார்த்தீர்களா!!

Summary:

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் ஆந்தாலஜி திரைப்படம் நவரசா. இதில் மனித உணர்வுகளான கோபம், கர

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் ஆந்தாலஜி திரைப்படம் நவரசா. இதில் மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சரியம் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்டு ஒன்பது கதைகளாக உருவாகி வருகிறது. 

இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை 
கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், ப்ரியதர்ஷன், கார்த்திக் நரேன், அரவிந்த் சுவாமி, கார்த்திக் சுப்புராஜ், சர்ஜுன், ரதீந்திரன் பிரசாத், வசந்த் சாய் ஆகிய 9 இயக்குனர்கள் உருவாக்கியுள்ளனர். நவரசா  நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று 190 நாடுகளில் வெளியாகவுள்ளது.  இதில் சம்மர் ஆஃப் 92 என்ற நகைச்சுவை படத்தில் நடிகர் யோகிபாபு நடிக்கிறார்.

இப்படம் குறித்து யோகிபாபு கூறுகையில், காமெடி கதாபாத்திரங்கள் மிகவும் வலிமையானது. அதனை அனைவராலும் செய்துவிட முடியாது.  ஆனாலும் பன்முகத்தன்மை கொண்ட, அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தும் குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதை நான் விரும்புகிறேன்.

நடிகர் நாகேஷ் மற்றும் கவுண்டமணி ஆகியோர் காமெடியில் மட்டுமல்லாமல் பல படங்களில் குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்து  அனைவரையும் கவர்ந்துள்ளனர். அவ்வாறு கடினமான கதாபாத்திரத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தி நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி. ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

 


Advertisement