சினிமா

என்னது.. வடிவேலு இல்லையா! அப்போ சுந்தரா டிராவல்ஸ் 2வில் நடிக்கப்போவது யார் யார்னு பார்த்தீர்களா!!

Summary:

சமீபகாலமாக சூப்பர் ஹிட்டான திரைப் படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாவது பெருமளவில் அதிகரித

சமீபகாலமாக சூப்பர் ஹிட்டான திரைப் படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாவது பெருமளவில் அதிகரித்து வருகிறது. பில்லா, விஸ்வரூபம், வேலையில்லா பட்டதாரி, சண்டக்கோழி, அரண்மனை, சாமி போன்ற பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் தற்போதும் இந்தியன் 2, சந்திரமுகி 2 போன்ற படங்களின் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது.

இந்நிலையில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். இத்திரைப்படத்தில் முரளி மற்றும் வடிவேலு நடித்திருந்தனர். முழுவதும் காமெடி நிறைந்த இத்திரைப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இந்த நிலையில் சுந்தரா டிராவல்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

ஆனால் இந்தப்படத்தில் வடிவேலு நடிக்கவில்லையாம். அவரது கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறாராம். மேலும் முரளி கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சுந்தரா டிராவல்ஸ் முதல் பாகத்தை போல இரண்டாம் பாகமும் நகைச்சுவை நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


Advertisement