இந்த சூழலிலும் ட்ராபிக் போலீசாருக்கு உதவிய நடிகர் யோகிபாபு..! நல்ல உள்ளத்திற்கு குவியும் பாராட்டுக்கள்..!



yogi-babu-helps-to-traffic-police

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தவும், மக்களை குணப்படுத்தவும் அணைத்து நாடுகளும் போராடிவருகிறது. மேலும், கொரோனவை தடுக்கும் விதத்தில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் வரும் மே 3 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதுபோன்ற நேரத்தில் ஏழை மக்கள் பலர் தங்களின் வாழ்வாதரத்திற்காக கஷ்டப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

Yogi babu

அந்த வகையில் நடிகர் யோகி பாபு அவர்கள் கொரோனாவால் அவதியுற்று வருபவர்களுக்கு உதவி செய்து வருவதோடு, கொரோனா தடுப்பு பணியில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு N95 மாஸ்க் மற்றும் ஊட்டச்சத்து பானங்களை வாங்கி கொடுத்துள்ளார். சென்னை ட்ராபிக் போலீசார் மற்றும் சட்ட ஒழுங்கு போலிஸாருக்கு இதை வழங்கியுள்ளார்.

சமீபத்தில் நடிகர் யோகி பாபு அவர்கள் நாடக நடிகர்கள் மற்றும் தினசரி நடிகர்களுக்கு 1,250 கிலோ அரிசி வழங்கி இருந்தார். யோகிபாபுவின் இந்த உதவிக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.