தமிழகம் சினிமா

'இதெல்லாம் மூஞ்சினாவே நம்ப மாட்டாங்க கூர்க்கானா' வெளியானது யோகி பாபுவின் கூர்க்கா டீசர்.!

Summary:

yogi babu - new tamil movie - gurgha teaser release

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் யோகி பாபு. சாதாரண ஒரு நடிகனாக சினிமாவில் அறிமுகமான இவர் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு யாமிருக்க பயமேன் என்றே படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் யோகிபாபு.

மேலும், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. அதுமட்டும் இல்லாமல் தனி ஒரு நடிகராகவும் ஒருசில படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு, மனோபாலா, ஆனந்த்ராஜ், கருணாஸ், சார்லி, பிரதீப் ராவத், ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் கூர்கா. முழுக்க முழுக்க காமெடிக் கதையை மையப்படுத்திய இப்படத்தில் யோகி பாபு முன்னணி ரோலில் நடித்துள்ளார். 

நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வைரலாகி வருகிறது. இந்த டீசரை வைத்து பார்க்கும் பொழுது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளை கலாய்க்கும் வகையில் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement