சினிமா

விபத்திலிருந்து மீண்ட யாஷிகா ஆனந்த் தற்போது எப்படி உள்ளார் என்று பாருங்கள்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

Summary:

விபத்திலிருந்து மீண்ட யாஷிகா ஆனந்த் தற்போது எப்படி உள்ளார் என்று பாருங்கள்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவருமான யாஷிகா கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி திரும்பிய போது சூலேரிக்காடு என்ற பகுதியில் பெரும் விபத்தில் சிக்கினார்.

இதில் யாஷிகா மற்றும் அவரது ஆண் நண்பர்கள் இருவருக்கு பயங்கர காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மேலும் அந்த விபத்தில் யாஷிகாவின் உயிர்தோழியான வள்ளிஷெட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

அண்மையில் கூட யாஷிகா காலில் பெரிய கட்டுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். நான்கு மாத சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் முற்றிலும் குணமடைந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு கலந்துக்கொண்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்து அதில் என்னைச் சுற்றியிருந்த நெருப்பை விட எனக்குள் இருந்த நெருப்பு பிரகாசமாக எரிந்ததால் நான் உயிர் பிழைத்தேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.

 

 


Advertisement