சினிமா

விபத்துக்கு பிறகு முதன்முதலாக யாஷிகா போட்ட பதிவு! நெருங்கிய தோழியின் இறப்பு குறித்து கூறியுள்ளதை பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் யாஷிகா கடந்த சில தினங்களுக்கு நள்ளிரவில் மாமல்லப

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் யாஷிகா கடந்த சில தினங்களுக்கு நள்ளிரவில் மாமல்லபுரத்தில் இருந்து சென்னை திரும்பிய போது சூலேறிக்காடு என்ற பகுதியில்   அவரது கார் அதிவேகமாக வந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. 

இதில் யாஷிகா மற்றும் அவரது ஆண் நண்பர்கள் இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தோழி வள்ளிஷெட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் யாஷிகாவின் உடலில் பல எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் அவருக்கு மூன்று சர்ஜரிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது.

விபத்திற்கு பிறகு யாஷிகா முதன்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் அவர், நான் தற்போது எந்த நிலையில் இருக்கிறேன் என்பதை குறித்து விவரிக்க முடியவில்லை.  நான் வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியுடன் இருக்கப் போகிறேன். இப்படி பெரும் விபத்திலிருந்து என்னை  காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா? இல்லை எனது நெருங்கிய தோழியை என்னிடமிருந்து பிரித்துக் கொண்டதற்காக கடவுளை குறை கூறுவதா? என தெரியவில்லை. ஒவ்வொரு நொடியும் நான் பவானியை மிஸ் செய்கிறேன். நீ என்னை மன்னிக்கமாட்டாய் என எனக்கு நன்கு தெரியும். என்னை மன்னித்துவிடு உன்னுடைய குடும்பத்தை இப்படியொரு கொடுமையான நிலைமைக்கு தள்ளிவிட்டேன்.

வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்ச்சியோடதான் இருப்பேன். உன்னுடைய ஆத்மா சாந்தி அடையட்டும். நீ என்னிடம் மீண்டும் திரும்பி வந்துவிட வேண்டும் என பிரார்த்தனை  செய்கிறேன். ஒருநாள் உனது குடும்பத்தினர் என்னை மன்னிப்பார்கள் என நம்புகிறேன். என்றும் உனது நினைவுகளை நினைத்து பூரிப்படைவேன் என பதிவிட்டுள்ளார். நான் எனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை. என்னுடைய ரசிகர்களும்  கொண்டாட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அவரின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். கடவுள் தான் அவர்களுக்கு பலத்தை கொடுக்க வேண்டும். என் வாழ்வில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


Advertisement