சினிமா

பரிதாபத்தின் உச்சியில் இருக்கும் நடிகை யாஷிகாவை பார்த்தீர்களா! புகைப்படத்தை கண்டு வருந்தும் ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்&n

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா கடந்த சில மாதங்களுக்கு முன்  மாமல்லபுரத்தில் இருந்து காரில் சென்னை திரும்பிய போது சூலேரிக்காடு என்ற பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்தில் சிக்கினார்.

இந்த விபத்தில் யாஷிகா மற்றும் அவரது ஆண் நண்பர்கள் இருவருக்கு பயங்கர காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மேலும் அந்த விபத்தில் யாஷிகாவின் உயிர்தோழியான வள்ளிஷெட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதற்கிடையில் முதுகு மற்றும் கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு மூன்று சர்ஜரி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த யாஷிகா வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில் யாஷிகா தனது உடல்நிலை குறித்த புகைப்படங்கள் மற்றும் உருக்கமான பதிவுகளை அவ்வப்போது வெளியிடுவார். இந்நிலையில் யாஷிகா தனது நிலை குறித்து தற்போது புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவரது தாயார் யாஷிகாவுக்கு உணவு கொடுக்கிறார். பக்கத்தில் அவரது செல்ல நாய்க்குட்டி ஒன்று உள்ளது. அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. 


Advertisement