சினிமா

ஐயோ.. காலில் எவ்ளோ பெரிய கட்டு! முதன்முறையாக மருத்துவமனையிலிருந்து வெளிவந்த யாஷிகாவின் புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

Summary:

பிரபல நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் மாமல்லப

பிரபல நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான யாஷிகா கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் மாமல்லபுரத்தில் இருந்து காரில் சென்னை திரும்பிய போது சூலேரிக்காடு என்ற பகுதியில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி பெரும் விபத்தில் சிக்கியது.

இதில் யாஷிகா மற்றும் அவரது ஆண் நண்பர்கள் இருவர் பயங்கர காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் யாஷிகாவின் தோழி வள்ளிஷெட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் யாஷிகாவின் உடலில் முதுகு மற்றும் கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் அவருக்கு மூன்று சர்ஜரிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் காலில் மிகப்பெரிய கட்டுடன், மருத்துவமனையில் படுக்கையில் மிகவும் பரிதாபமாக யாஷிகா படுத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட ரசிகர்கள் யாஷிகா விரைவில் குணமடைய வாழ்த்து கூறி வருகின்றனர்.


Advertisement