சினிமா

பாவம் யாஷிகா! ரொம்ப கஷ்டபடுறாரே! அவரோட நிலைமையை பார்த்தீங்களா! 3 மாதங்களுக்கு பின் வெளிவந்த வீடியோ!!

Summary:

பாவம் யாஷிகா! ரொம்ப கஷ்டபடுறாரே! அவரோட நிலைமையை பார்த்தீங்களா! 3 மாதங்களுக்கு பின் வெளிவந்த வீடியோ!!

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர் ஜுலை 25 ம் தேதி புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு நண்பர்களுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது பெரும் விபத்தில் சிக்கினார். 

இதில் யாஷிகாவின் உயிர்தோழியான வள்ளிஷெட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் யாஷிகாவிற்கு பயங்கர காயம் ஏற்பட்டது. முதுகு, தோள் மற்றும் கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் படுக்கையில் இருந்த, சிகிச்சை பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் தற்போது அவர் தனக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட நடைப்பயிற்சி வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், மிகவும் கஷ்டப்பட்டு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் அவரை உற்சாகப்படுத்தி கமெண்ட்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.


Advertisement