யாஷிகா தான் இப்படின்னா! யாஷிகாவின் அம்மாவும் இப்படித்தானா..!



Yashika anand mom funny photo goes viral

தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றிபெற்றது இந்த திரைப்படம். இதைத்தொடர்ந்து கவுதம் கார்த்தி நடிப்பில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது யாஷிகாவிற்கு.

இதில் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யாஷிகா. இதை பார்த்த பலரும் யாஷிகாவிற்கு ரசிகர்கள் ஆனார்கள். ஒரே நைட்டில் பிரபலாமானார் யாஷிகா. பல்வேறு டிவி சேனல்கள், வலைத்தளங்களுக்கு பேட்டி கொடுத்தார் யாஷிகா. இவரது புகழை பார்த்த விஜய் டிவி பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கியது.

yashika

தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் யாஷிகா. அவரது அம்மா, தன்னை மிகவும் சுதந்திரமாக வளர்த்துள்ளார் என்று பலமுறை கூறியுள்ளார் யாஷிகா.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை யாஷிகாவின் அம்மா சோனாலின் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் யாஷிகா.அதில் சோனல்,யாஷிகா பயன்படுத்தும் ஷூவையும் அணிந்தவாறு போஸ் கொடுத்துள்ளார் . இதனை கண்ட அனைவரும் யாஷிகா போலவே நீங்களும் இப்படி தானா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

yashika