தமிழகம் சினிமா

யாஷிகா கார் விபத்து சிசிடிவி காட்சி என கூறப்படும் வீடியோ!! இணையத்தில் வைரலாகிவரும் வீடியோ இதோ!!

Summary:

கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்

கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

சூளேரிக்காடு பகுதியில் சாலைத்தடுப்பில் மோதி கார் கவிழ்ந்ததில் நடிகை யாஷிகா மற்றும் அவருடன் பயணித்த அவரது இரண்டு நண்பர்கள் காயமடைந்தனர்.. மேலும் காரில் பயணித்த யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவானி (28) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் பலத்த காயமடைந்த நடிகை யாஷிகாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது  யாஷிகாவிற்கு முக்கிய அறுவை சிகிச்சை முடிந்துள்ளநிலையில், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Yashika Aannand and Valisetty Bhavani made risky mistakes that caused fatal  accident? - Tamil News - IndiaGlitz.com

இந்நிலையில் விபத்து  நடந்த அன்று இரவு என்ன நடந்தது என்பது குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகிவருகிறது. இதுதான் யாஷிகாவின் கார் விபத்து நடந்த சிசிடிவி காட்சி என ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. ஆனால் அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவில் நடந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் என கூறப்படுகிறது. மேலும், விபத்து நடந்தபோது உயிரிழந்த யாஷிகாவின் தோழி பவானி, காரின் டாப்பை திறந்துவிட்டு நின்றுகொண்டே வந்ததாகவும், அப்போது அவரது ஆடை யாஷிகாவின் முகத்தில் பட்டதில், வழி தெரியாமல் யாஷிகா காரை தடுப்பு சுவரில் மோதி விபத்தை ஏற்படுத்தியதகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இவை அனைத்தும் உண்மை இல்லை எனவும், விபத்து நடத்த இடத்தில் சிசிடிவி கேமிரா இல்லை எனவும், விபத்து நடந்தபோது யாஷிகாவின் தோழி லெகின் போன்ற ஆடைதான் அணிந்திருந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். இதனிடையே யாஷிகாவின் ஆண் நண்பர் நிரூப் நந்தகுமார் என்பவர் பல தகவல்களை காவல்துறையிடம் வாக்குமூலமாக அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், விபத்து நடந்த 24ம் தேதி இரவு 11 மணி அளவில், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்ததாகவும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை வந்துகொண்டிருந்தபோது, சூளேரிக்காடு பேருந்து நிறுத்தம் அருகே, இரவு 11 . 30 மணியளவில் கார், நிலை தடுமாறி சாலைக்கு வலதுபுறம் இருந்த இரும்பு தகட்டின்மீது மோதி, தலைகீழாக கவிழிந்ததாகவும அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போலீசார் யாஷிகாவிடம் நடத்திய விசாரணையில், காரை அதிவேகமாக ஒட்டியதால்தான் விபத்து நடந்தகாக அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசார் யாஷிகா மீது மூன்று பிரிவிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், யாஷிகாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மதுபோதையில் இந்த விபத்து நடக்கவில்லை எனவும் போலீசார் ஏற்கனவே தெரிவித்துள்ளனர். உண்மையில் அன்று இரவு என்ன நடந்தது? விபத்து எப்படி நடந்தது என்று பல்வேறு தகவல்கள் இணையத்தில் உலா வந்துகொண்டிருக்கிறது.


Advertisement